கல்வி

Tuesday, June 9, 2015


                     கல்வி
                    (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பார்வை)

 







கல்வி என்பது புத்தகங்களை படிப்பது மனப்பாடம் செய்வதும் இல்லை ஆனால் எப்படி பார்க்கவேண்டும் என்பதையும் , எப்படி கேட்கவேண்டும் ,எப்படி லேர்ன் செய்யவேண்டும் என்பதையும் பற்றி தெரிந்து கொள்வதாகும்.
என்கிறார் இதன் மூலம் எப்படி பார்க்கவேண்டும் எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று கொண்டால் குழந்தைகளே விசயங்களை பார்க்க
அறிந்து கொள்வார்கள் என்கிறார்
கல்வி என்பது தேர்வுகளை எழுதி பாஸ் ஆவது மட்டுமல்ல. பெரும்பாலானோர் தேர்வுகளை எழுதி பாசாகுவதே கல்வி என நம்பி கொண்டு இருக்கிறார்கள் .தேர்வுகளில் பாசாகுவது வேலையை தேடி கொள்வதும் பிறகு திருமணம் முடித்து செட்டி ஆவதுன்னு கல்வியை
புரிந்து கொள்கிறார்கள் ஆனால் அதுவா கல்வி ?
பறவைகளை பார்க்கவும் , ஒரு மரத்தின் ஒப்பற்ற அழகை ரசிக்கவும் ,மலைகளின் வடிவம் அதன் எழில் இவற்றை உங்களால் பார்க்க முடியுமா?
அவற்றோடு தொடர்பு கொள்ள முடியுமா?
முடியவில்லை என்றால் ஏன் முடியவில்லை ?
நீங்கள் பெரிய ஆளாக வளர வளர  கற்றுக்கொள்ளும் மன அமைப்பு (sense of listening, seeing, unfortunately disappears)  துரதிஸ்டவசமாக இல்லாதொழிகிறது .
ஏனெனில் பணக்காரனாகவேண்டும் என்ற கவலை , நிறைய சம்பாரிக்க வேண்டும் என்கிற அவா , பெரிய கார் வாங்கனும் வீடு கட்டனும் என்கிற
பொருளாதாரக் கவலைகள் உங்களின் சென்ஸ் ஆப் லிசனிங்கை இல்லாதாக்குகிறது.

நீங்கள் லட்சியவாதியாகிறீர்கள். பொறாமை காரர்களாக மாறுகிறீர்கள் மேலும்
உலகில் என்ன நடக்கிறது என்று நினைக்கிறீர்கள் நாடுகளுக்கு நாடுகள் பிரிவினை ;மனிதர்களுக்கிடையே பிரிவினை, ஒரு போராட்டம் எல்லா உறவுகளிலும் நீடித்து நிலவுகிறது.வறுமை வாட்டுகிறது ஆனாலும் மனிதர்கிடையே , சாதி மதம் இன்னும் எண்ணற்ற வேற்றுமைகள் நிலவுகிறது
மனிதன் அடுத்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை குறித்து கவலை அடையாதவனாக மாறிவிட்டான். மேற்கண்டவாறு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குழந்தைகளை தயார் செய்யும் பணியை கல்வி அமைப்பு செய்கிறது (fit for the situation) .
உங்களுக்கு தெரியுமா இந்த உலகம் பைத்தியகாரர்கள் நிரம்பியதாகிவிட்டது பைத்தியம் என்பது ஒருத்தரை ஒருத்தர் கெடுத்தல் , முந்தி செல்ல அரசியல் செய்தல் தள்ளி விடுதல் . அடுத்தவர் துன்பத்தில் குளிர் காய்வது என்று
உலகம் பைத்தியகாரர்களின் கூடாரம் ஆகிவிட்டது.
ஆகவே கல்வி என்பது இதற்கு தக்கவாறே அமைக்கப்படுகிறது.
போட்டி மயமான சூழல் அதை தாக்குபிடிக்கும் கல்வி .
நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ நீங்கள் இந்த சமூகத்தின் முட்டால் தனத்துடன் பிட் ஆகவேண்டும்.
அதற்கு ஒரு வழியாக கல்வியை ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே உங்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை . இயற்கையுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை , கல்வி உங்களுக்கு எதையும் புதிதாக பார்க்க சொல்லிதரவில்லை.
சிலர் சமூகத்தை விட்டு ஓடுகிறார்கள் ஆனால் அது தீர்வாக இருக்க முடியாது .
நீங்களும் நானும்தான் இந்த சமூகத்தை உருவாக்கி இருக்கிறோம் எனவே நாம்தான் அதை மாற்ற வேண்டும்
என்ன செய்ய போகிறீர்கள்
You and I create the society in which we live. So you have to change. You cannot fit into this monstrous society. So what are you going to do?




நீங்கள் குழந்தைகளாக இருக்கும் போது வெகுளியாக இருக்கிறீர்கள் உங்களிடம் இன்னும் உலகத்துடைய சூது வாது வந்து சேரவில்லை எனவே உங்களால் இந்த புவி பரப்பின் அழகை தரிசிக்க முடியும் ஆனால் வயது வந்தவுடன் அப்படி அல்ல , இந்த சமூகம் கொடுக்கும் கத்தரிக்கப்பட்ட
பார்வையை வழங்குகிறது.
சமூகம் எதை முக்கியமாக கருதுகிறது , பணம் பதவி ,கெளரவம் என்ற கருத்துருக்களை அடைய வேண்டும் என்பதைத்தானே. இதைத்தான் மதிப்பு என சிருஸ்டிக்கிறது. இந்த மதிப்பை அடைய பிட்டாகும் படி சொல்கிறது.
இந்த சமூக அமைப்பு என்கிற வார்ப்புக்கு உங்களை தயார்படுத்துகிறது.
சரி இப்போது நீங்கள் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்கிறீர்கள், எல்லா வற்றையும் கவனிக்கிறீர்கள் . இந்த கவனித்தலின் காரணமாக ஒரு கவனிக்கும் மனிதனாக வளர்கிறீர்கள்.
இதனால் நீங்கள் கொஞ்சம் வேற மாதிரியான நபராக வளர்கிறீர்கள்.
அன்பானவனாக , மற்றவர்களின் மீது அக்கறை உள்ளவனாகா , மனிதர்களை நேசிப்பவனாக வளர்கிறீர்கள்.
இதன் மூலமே இதன் மூலம் மட்டுமே நீங்கள் உண்மையில் பயனுள்ள ஒரு மததன்மை உள்ள வாழ்வை பெற முடியும்.
எனவே ம்ரங்களையும் காடுகளையும் பாருங்கள் , இயற்கையை கண்டு களியுங்கள், காலையிலும் மாலையிலும் கூச்சலிடும் பறவைகளின் குரலை கேளுங்கள் . வானத்தின் எழிலை , அதன் உதயகாலத்தை அந்திம காலத்தை பாருங்கள் , மரங்களையும் அதன் இலைகளில் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள்.
நான் உங்களை இவற்றின் மீது கவனம் செலுத்த சொல்கிறேன் ஏனெனில்.
ஒரு மரத்தை முழு கவனத்துடன் பார்க்கும் போது அதன் கிளைகளை அல்ல அதன் மொத்த முழுமையை காணவேண்டும்.
இந்த கவனம் செலுத்துவது என்பது உங்கள் வகுப்பறையில் மட்டுமல்ல வெளியே நடந்து செல்லும் போது , ஒருவருடன் பேசும் போது கவனம் செலுத்துவது என்பது மிகப்பெரிய செயல்.
நான் உங்களை ஒன்று கேட்கிறேன் நீங்கள் ஏன் படிக்கிறீர்கள். கணிதம் போட க்ற்றுகொள்கிறீர்கள் , வரலாற்றை படிக்கிறீர்கள் இவ்வாறே அறிவியல் படிக்கிறீர்கள் இதெல்லாம் ஏன் படிக்கிறீர்கள் என்பதை எப்போதாவது கேள்வி கேட்டது உண்டா?
இந்த கல்வியில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? .
உலகம் எங்கும் இருக்கும் மனித சமூகம் மொத்தமாக கல்வியை எதற்காக பயன்படுத்துகிறார்கள்.
சீனாவிலாகட்டும் ருஸ்யாவிலாகட்டும் கல்வி என்பது அந்த சமூகத்துடன் இணைய ஒரு கருவியே.
இந்த கல்வியை நீங்களும் பெறவேண்டும் என நினைக்கிறீர்களா ?
சமூகத்தில் இருக்கும் அனைத்து கீழ் நிலமைகளையும் அப்படியே ஏற்று கொண்டு அதனுடன் இணைக்கும் கல்வியே வழங்கப்படுகிறது.
அல்லது வேறு வகையிலான கல்வியை பெற விரும்புகிறீர்களா?
உண்மையான கல்வி என்பது உங்களை வரலாறு புவியியல் கணக்கியலில் நிபுணத்துவம் அடைவதோடு சமூகத்தில் தவறான கருத்தியலுக்கு உட்படாமல் இருக்க சொல்லிதருவதாகும்.
உண்மையான கல்வி என்பது ஏற்கனவே இருக்கிற கலாசாராத்தை தகர்த்து [புதிய கலாசாரத்தை உருவாக்குவதே ஆகும்
----------தொடரும்



0 comments:

Post a Comment

Popular Posts

Total Pageviews