தனிமை

Saturday, June 6, 2015


                           தனிமை
(ஜெ கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள்_)






தனிமையை எப்படி கொல்லலாம் என்பதே என் முன் உள்ள அல்லது அல்லது உங்கள் முன் உள்ள கேள்வி எங்கள் என்றால் அங்கே ஒன்றுக்கு மேற்பட்ட பலர் வந்து விடுகிறார்கள் அதனால் தனிமை இல்லை.
சினிமா பாடல்கள் , பிளாக்குகள் வாசித்தல் புத்தகம் வாசித்தல் எழுதுதல்
இவற்றை முடிக்காமல் தொடரமுடியாது ஏனெனில் என்னை தனிமை பின்தொடர்கிறது ஒரு போலீஸ்காரன் திருடனை பிந்தொடர்வதை போலவே அந்த தனிமை விரைவாக வருகிறது.


தனிமனிதன் மனைவியுடன் இருக்கலாம் / விளையாடலாம் பேசலாம் நிறைய புத்தகங்களை எழுதி பேப்பர்களை வீணடிக்கலாம் ஆனால் அவன் தனது முதுமையிலாவது தனிமையை நேருக்கு நேர் நெத்திக்கு நெத்தி சந்தித்தாக வேண்டி உள்ளது.
இந்த தனிமையை உணர்த்துவது என்ன நான் தனியாக இருக்கிறேன் என்பதை உணர்த்துவது நமது மனம் அல்லவா ?
மனம் என்பதை நமது சிந்தனை தொகுதி அல்லது சிந்திக்கும் மூளை என வைத்து கொள்ளலாமா ?
நான் பசியாக இருக்கிறேன் என்பதை போல நான் தனியாக இருக்கிறேன் என மூளை சொல்கிறது.
ஆனால் சிந்தனை என்பதை எப்போதுமே பழையது செத்து போனதுதான்
எண்ணங்கள் எப்போதுமே பழைய டேட்டா வெரிபிகேசன் செய்துட்டே இருக்கும் . இப்போ தனிமை வந்தவுடன் உங்கள் பிரைன் ஐடியல் ஆகுது.
ஸ்டன் ஆகுது . ஸ்டாப் ஆகுது.
உங்க மனசுக்கு பீடிங் இல்லை நிறுத்தியாச்சு உடனே தூக்கம் வந்துடும் அல்லது போனை கையில் எடுத்துடுவீங்க தனிமையை சந்திக்க மாட்டீங்க இல்லையா ?


அதை சந்திக்க சொல்றார் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தால் உங்கள் பயம் , அன்பு போன்ற விசயங்களுக்கு விடை கிடைக்கும் என்கிறார் .
சிந்தனையை நிறுத்தியதும் உங்கள் மனம் ஒரு பொருளை போல உங்கள் முன் நிற்கும்போது அதில் தெரியும் பிரதிபிம்பம் – இதெல்லாம்
கற்பனை செய்யாதீங்க
ஒரு வேளை உங்களை நீங்களே காணலாம் என்கிறார்

முயற்சித்து பாருங்கள்

0 comments:

Post a Comment

Popular Posts

Total Pageviews