மறுபடி காதல்

Wednesday, June 10, 2015
(கதையை படித்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள் ........... ஒரு எழுத்தாளணை உருவாக்குங்கள்)

அந்த பழகத்தை நிறுத்தனும்டா என சொல்லிகொண்டிருந்த சங்கரை பார்த்தான் சிவா .
எப்போதுமே பெண்கள் விசயத்தில் சாதுவான இவன் எப்படி வாட்ஸ் அப்பில்
சில்லி ஒரு பெண்ணிடம் சிக்கினான் என்ற யோசனையுடன் இரண்டு டீ என்று  ஆடர் செய்துவிட்டு கிங்சை நீட்டினான்.
வேணாண்டா மூடு இல்லை
சரி விடு எப்படி ஆரம்பிச்சது இந்த பழக்கம் .
டே அவளுக்கு குட்மார்னிங் போட்டிருந்தாள் இந்த பெண் .
நான் இது எனது நம்பர் என்றும், நான் சுதாவின் கணவன் என்றும் பதிலனுப்பினேன்,
சார் எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கேன்
என்ன சாப்பிட்டீங்க
இட்லி சட்னி
என ஆரம்பித்த பழக்கம் பிற்பாடு இரவு 11 மணி வரை தொடர்ந்ததை சுதா அறியமாட்டாள்.
ஒரு நாள் அவள் அனுப்பிய காதல் சிம்பளுக்கு நானும் லவ்ஸ் விட அப்படியே லவ்வாகிடுச்சிடா?
ஆட்களில்லாமல் இருந்த அந்த ரோட்டில் கொஞ்சம் புதியதானது அந்த டீ கடை, இவர்களது பேச்சில் சுவராசியம் அதிகமானது அந்த காதல் தோன்றிய பகுதிதான் என்பது சங்கரின் கண்கள் விரிந்த போது தெரிந்தது.
ஒரு குழந்தைக்கு தகப்பனான சங்கர் ஒரு கம்பெனியின் குமாஸ்தா வேலைபார்த்தாலும் மனைவி வீட்டில் மிகவும் வசதியானவர்கள்
சுதாவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டான்.
அதெப்படிடா லவ் சிம்பள் விட்ட உடனே காதல் வருது உங்களுக்குள்ள
சிவாவுக்கு பொறுக்க முடியவில்லை
வேறு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆவல் ஓடியது அவன் மனதில்.
எப்படியோ ஆச்சுன்னு சொல்லி வேப்ப மரத்தை நோக்கினான் சங்கர் .
சங்கர் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது , சுதா வீட்டிலும்தான்
இரவோடு இரவாக இருவரையும் திருப்பதி அழைத்து சென்று திருமணம் முடிந்த கையோடு சென்னையில் ஒரு மாதம் தனது வீட்டில் வைத்திருந்து
பிறகு செங்கல்பட்டில் இவனுக்கு ஒரு வேலையும் பார்த்து குடிவைத்தவந்தான் இந்த சிவா
காதல் ஒருமுறைதான் வரனும் என்றும் காதலித்தவளுக்கு துரோகம் செய்யகூடாது என்றும் திரும்ப திரும்ப சங்கருக்கு சொல்லிபார்த்து
அசந்து போய்விட்டான்.
இப்ப என்னடா சொல்ற,
வாட்ஸ் அப் காதல் வேண்டாங்கிறேன்
அவ செத்துருவாடா
சாகட்டும்
என்னால தாங்கிக்க முடியாது
அப்போ நீயும் செத்து போடா ? இதை சொல்லும்போது கண்களில் மிக அதிகமான கோபத்துடன் இருந்தான்.
ஒன்னு செய்யலாம் நம்பரை மாத்து , வேற நம்பரை போடுன்னு சொல்லிட்டு கிளம்பினான் சிவா.
புதிய நம்பரை போட்டதற்கு சுதாவிடம் இருந்து எதிப்பு கிளம்பியது.ஏன் எதுக்குன்னு சொல்லாமல் மறைத்து விட்டான் .
ஹய் நம்பரை மாத்திடீங்களா என்ற செய்தி அடுத்த நாள் காலையில் வரப்போகிறது என தெரியாமல் தூங்கபோனான்.

0 comments:

Post a Comment

Popular Posts

Total Pageviews